உலக பாரம்பரியத்தில் இடம்பிடிக்குமா இலங்கையின் அபூர்வ இடங்கள்?

உலக பாரம்பரியத்தில் இடம்பிடிக்குமா இலங்கையின் அபூர்வ இடங்கள்?

கண்டி தலதா பெரஹெராவை உலக பாரம்பரியத்தில் பெயரிடுவதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள யுனெஸ்கோ அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அதன் பொதுச்செயலாளர் டாக்டர் புஞ்சி நிலமே மீகஸ்தென்ன தெரிவித்தார்.

இது ஒரு அபூர்வமான பாரம்பரியம் என்று பெயரிடப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் பிரதான முதல் ஏரியாக கருதப்படும் அபய வாவி (பசவக்குளத்தை) உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கும் திட்டத்தை நீர்ப்பாசன அமைச்சகம் சமர்ப்பித்துள்ளதாகவும் டாக்டர் புஞ்சி நிலமே மீகஸ்தென்ன தெரிவித்தார்