
ஆசிரியை உட்பட 10 பேருக்கு கொரோனா
கொட்டகலை பொது சுகாதர பரிசோதகர் காரியாலய பகுதியில் ஆசிரியை ஒருவர் உட்பட மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
அண்மையில் ஆசிரியர்கள், மாணவர்கள் என 10 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து அவர்களோடு தொடர்பை பேணியவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை இன்று வெளியான போதே ஆசிரியை ஒருவர் ,கெம்ர்ஷியல் பகுதியை சேர்ந்த ஐவர் , மற்றும் டெரிகிளேயர், லோகி தோட்ட பகுதியை சேர்ந்த நால்வர் என 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தொற்றுக்குள்ளானவர்களை சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 150 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்