சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு இல்லை - பிரதமர் மஹிந்த
நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் பண்டிகைக் காலங்களில் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான எந்த வித அவசியமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பில் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற மீளாய்வு கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
அரிசி, தேங்காய், பால்மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு மற்றும் தானிய வகை, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கிழங்கு, மரக்கறி மற்றும் பழங்கள் போன்றே சமையல் எரிவாயு நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்குவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் கொவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் விநியோக வலையமைப்பு சீர்குலைதல், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் விலையை அதிகரிக்க எரிவாயு நிறுவனங்கள் கோரியுள்ளமை என்பன தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது