உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப்பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஒத்திவைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பரீட்சையை ஒத்திவைப்பது பேச்சுவார்த்தை மட்டத்திலேயே உள்ளது. இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இது தொடர்பில் நாம் கலந்துரையாட வேண்டியது மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமுமே. அதற்கு எமக்கு கால அவகாசம் வேண்டும் என்றார்.

மேலும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் எனவும் குறிப்பிட்டார்