தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது!

தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது!

இரு வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரகம பிரதேசத்தில் விசேட தேவையுடைய இராணுவ சிப்பாய் ஒருவரை தாக்கிய பண்டாரகம பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினர் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறே, மதுபோதையில் உணவு விடுதியொன்றின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பியகம பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று மஹர நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளார்