அடையாள வேலை நிறுத்தத்திற்கு மத்தியில் 14 அலுவலக தொடருந்துகள் சேவையில்

அடையாள வேலை நிறுத்தத்திற்கு மத்தியில் 14 அலுவலக தொடருந்துகள் சேவையில்

தொடருந்து சங்கங்கள் சிலவற்றின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கின்ற போதிலும் 14 அலுவலக தொடருந்துகள் கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பிரதான மார்க்கம், களனி மார்க்கம் மற்றும் கரையோர மார்க்கம் ஊடாக இந்த தொடருந்துகள் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடருந்து இயந்திர சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தொழிற் சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது