உரிய குடியிருப்புக்களை அமைத்துத் தருமாறு தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ராணி தோட்ட மக்கள் கோாிக்கை

உரிய குடியிருப்புக்களை அமைத்துத் தருமாறு தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ராணி தோட்ட மக்கள் கோாிக்கை

தங்களுக்கான உரிய குடியிருப்புக்கள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா - பிரவுண்ஸ்விக் - ராணி தோட்ட மக்கள் கோரியுள்ளனர்.

மஸ்கெலியா - பிரவுண்ஸ்விக் - ராணி தோட்ட பிரிவில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நெடுங்குடியிருப்பு ஒன்றின் 20 வீடுகள் முற்றாக எரியுண்டுள்ளன.

தீப்பரவல் காரணமாக எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் 73 பேர் அங்குள்ள பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மின்சார ஒழுக்கு காரணமாகவே தீப்பரல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது