எஹலியகொட கொள்ளை சம்பவம்:சந்தேக நபரை தேடும் காவல்துறை

எஹலியகொட கொள்ளை சம்பவம்:சந்தேக நபரை தேடும் காவல்துறை

எஹலியகொட நகரில் தங்க நகை விற்பனை நிலையத்தில் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நபரை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த சந்தேகநபர், தங்க சங்கிலிகளை கொள்வனவு செய்ய வேண்டும் எனக்கூறி நகைகளை பரிசோதித்துள்ளார்.

பின்னர் திடீரென பரிசோதித்த தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு தாம் பிரவேசித்த உந்துருளியில் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்