ஓட்டமாவடி ஆற்றிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

ஓட்டமாவடி ஆற்றிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

வாழைச்சேனை - ஓட்டமாவடி ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த 35 வயதானவரே இன்று முற்பகல் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று மதியம் தொழில் நிமிர்த்தம் சென்றிருந்த நிலையில் மாலை வரை வீடு திரும்பாததால் உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்