ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கு விளக்கமறியல்

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கு விளக்கமறியல்

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 மார்ச் மாதம் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது