பற் சத்திர சிகிச்சை நிபுணர்களின் சங்கம் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு
எதிர்வரும் 22ஆம் திகதி நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பற் சத்திர சிகிச்சை நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் வைத்தியர் விபுல விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ் எனப்படும் வைத்திய மானி சத்திர சிகிச்சை மானி மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் பற்சிகிச்சை வைத்தியர்கள் உள்ளடக்கப்படாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 22ஆம் சுகாதார அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக பற் சத்திர கிச்சை நிபுணர்களின் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்