தலைமன்னார் விபத்தில் உயிரிழந்த சிறுவனின் இறுதி அஞ்சலி!
தலைமன்னார் பகுதியில் நேற்றைய தினம் தனியார் பேருந்து மற்றும் புகையிரதம் மோதி எற்பட்ட விபத்தில் தலைமன்னார் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய பாலசந்திரன் தரூண் உயிரிழந்திருந்தார்.
சிறுவனின் உடல் இறுதிக் கிரியைகளுக்காகவும் பொது மக்களின் அஞ்சலிக்காகவும் அன்னாரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் உடலுக்கு தலைமன்னார் பகுதி மக்கள் தலைமன்னார் பாடசாலை மாணவர்கள் அரசியல் பிரமுகர்கள் அரச ஊழியர்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உடல் பொது மக்களின் அஞ்சலியின் பின்னர் 3 மணியளவில் தலைமன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது
