தலைமன்னார் விபத்தில் காயமடைந்தவர்களில் 16 பேர் பெண்கள்

தலைமன்னார் விபத்தில் காயமடைந்தவர்களில் 16 பேர் பெண்கள்

தலைமன்னார் இறங்குதுறைக்கு அருகில் தொடருந்து ஒன்றுடன், தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.

பாடசாலை மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த பேருந்து, தொடருந்துடன் மோதி இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த பேருந்தில் 30 பேர் பயணித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 25 பேர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 பெண்களும், 8 ஆண்களும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த காயமடைந்த ஒருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளரான, வைத்தியர் கே. செந்தூர் பதிராஜா எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்