முதியவரை மோதித் தள்ளி டிப்பர்! ஸ்தலத்திலேயே பலி

முதியவரை மோதித் தள்ளி டிப்பர்! ஸ்தலத்திலேயே பலி

கிண்ணியா - கொழும்பு வீதியில் முனைசேனை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் கிண்ணியா வில்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த 68 வயதான டெயிலர் நசீம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கிண்ணியாவில் இருந்து சிறியரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் வில்வெளியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதி விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக பலியானதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.