எந்தப் பயணக் கட்டுப்பாடுகளையும் விதிக்கமாட்டோம்! அரசாங்கம் திட்டவட்டம்
தமிழ் மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டுக்காக போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் ரமேஸ் பத்திரன இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தமக்கு தாமே பயணக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளாமல் கொரோனாவை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதுடன் சமூக இடைவெளிகளையும் பின்பற்றவேண்டும். அத்துடன் தமது பயணக்கட்டுப்பாடுகளையும் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.