மேற்கு முனைய அபிவிருத்தி செயற்பாட்டில் இணைய உள்ளதாக அதானி நிறுவனம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

மேற்கு முனைய அபிவிருத்தி செயற்பாட்டில் இணைய உள்ளதாக அதானி நிறுவனம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் செயற்பாட்டில் இணைய உள்ளதாக இந்தியாவின் அதானி நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் துறைமுக அமைச்சின் ஊடாக இதற்காக அனுப்பப்பட்ட கடிதம் தமது தரப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய மேற்கு முனையத்தின் 51 பங்கு தமது தரப்பிற்கு உரித்தாகுவதோடு அதனை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் துறைமுக அதிகார சபையுடன் இணைந்து அபிவிருத்தி செய்யவுள்ளதாக அதானி நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பல இந்திய ஊடகங்களும் முன்னுரிமை வழங்கியுள்ளன.

மேற்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது