அக்கரைப்பற்றில் போலி 5000 ரூபா தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

அக்கரைப்பற்றில் போலி 5000 ரூபா தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

அக்கரைப்பற்று- ஒலுவில் பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட போலி நாணய தாள்கள அச்சடித்த இடமொன்றை சுற்றிவளைத்த போது இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இராணுவ குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது 5000 ரூபா தாள்கள் 124 உம், முழுமையாக அச்சிடப்படாத 5000 ரூபா தாள்கள் 20 உம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மோட்டார் வாகனமொன்றும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்