மேல் மாகாணத்தில் 176 பேருந்துகளின் வழித்தட அனுமதிப் பத்திரங்கள் இரத்து
மேல் மாகாணத்தில் சுகாதார வழிகாட்டல்களை மீறி பயணிகளை ஏற்றிச் சென்ற 176 பேருந்துகளின், வழித்தட அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்ஜீவ இதனைத் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் இன்று முதல், 5ஆம், 11ஆம் மற்றும் 13 ஆம் தரங்களுக்கான பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில், சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் கண்காணிப்புகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் சாரதிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.