புத்தாண்டு காலத்தில் அரிசி விலை அதிகரிப்போ, பற்றாக்குறையோ ஏற்படாது - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே
புத்தாண்டு காலத்தில் அரிசி பற்றாக்குறை நிலவாது என விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட நெற்தொகைகளை சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட 20,000 மெட்ரிக் தொன் நெல் சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும்.
எதிர்வரும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசி வழங்க இந்த நெல் தொகை பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கை காரணமாக, உடனடியாக உயர்த்தப்பட்ட அரிசியின் விலை குறையும் எனவும், அதன்படி அரிசி இருப்புக்களை பாரிய அளவில் மறைத்து வைத்திருக்கும் வர்த்தகர்கள் தங்களிடமுள்ள நெற்தொகைகளை சந்தைக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனால் பண்டிகைக் காலங்களில் அரிசி விலையில் அதிகரிப்போ அல்லது அரிசி பற்றாக்குறையோ நிலவாது என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்