ஆடைத் தொழிற்துறையை மேம்படுத்த அரசு முழு ஆதரவு வழங்கத் தயார் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்

ஆடைத் தொழிற்துறையை மேம்படுத்த அரசு முழு ஆதரவு வழங்கத் தயார் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்

தற்போது ஆடைத் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள சவால்களை இனம் கண்டுள்ள அரசாங்கம், அதன் உற்பத்தித்திறனையும் தரத்தையும் மேம்படுத்துவதற்கு தமது முழு ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட வேலைத்திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் கூட்டணி பிரதிநிதிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுகாதார விதிமுறைகள் காரணமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பிலும் வர்த்தகர்கள் இக்கலந்துரையாடலின்போது தெளிவுபடுத்தினர்