மியன்மாரில் கடுமையான இராணுவச் சட்டம் அமுல்!

மியன்மாரில் கடுமையான இராணுவச் சட்டம் அமுல்!

மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் 'மாஷல் லோ' (Martial Law) என அழைக்கப்படும் கடுமையான இராணுவ சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளனர்.

யன்கொன் (Yangon) நகரத்தில் இராணுவத்தினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் மாத்திரம் 21 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அத்துடன், ஏனைய மாவட்டங்களிலும் பொதுமக்கள் பலியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், தற்போது, மியன்மாரில் உள்ள மேலும் பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன