அரச நிறுவனங்களில் விசேட சோதனை

அரச நிறுவனங்களில் விசேட சோதனை

அரச நிறுவனங்களின் தவறுகளைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் வகையில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி வரை இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகமும் 11 பிரதேச செயலகப் பிரிவுகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இந்தக் காலப்பகுதிக்குள் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களும் எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. இந்த நடவடிக்கையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 28 அதிகாரிகள் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.