அரிசி இறக்குமதி தொடர்பான யோசனை இன்று அமைச்சரவையில்

அரிசி இறக்குமதி தொடர்பான யோசனை இன்று அமைச்சரவையில்

அரிசி இறக்குமதி தொடர்பான யோசனையை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில், அரிசி விலை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சிலர் அரிசியை பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதெனவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

தற்போதைய நட்டமடைந்துள்ள சூழ்நிலையை அறிந்தும், அதிக விலைக்கு அரிசியை சேகரிக்க முயற்சிப்பதாக அரசாங்கத்தின் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

இது தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசியமற்ற முறையில் விலையை அதிகரிக்க வேண்டாம் என குறித்த தரப்பினருக்கு தாங்கள் கூறியதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பெருமளவான அரிசியைக் கொண்டுவந்து, சந்தைக்கு விடுவிக்கும்போது, நட்டம் ஏற்பட்டவுடன் இந்த நடவடிக்கை முடிவுக்கு வரும்.

நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக, அரிசியை இறக்குமதி செய்வதைத் தவிர வேறு மாற்றுவழி இல்லை என்பதை இன்று அமைச்சரவைக்கு தெளிவுபடுத்த உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்