
தொடரும் சாலை விபத்துகள்; 12 பேர் மரணம்
இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துகள் காரணமாக 12 பேர் மரணித்தனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை குறிப்பிட்டார்.
விபத்துக்களினால் நேற்றைய நாளில் மாத்திரம் 9 பேர் மரணித்தனர்.
ஏனையவர்கள், அதற்கு முந்தைய நாளில் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மரணித்ததாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு மரணித்தவர்களில் உந்துருளியில் பயணித்த 6 பேரும், பாதசாரிகள் நால்வரும் அடங்குகின்றனர்.
இதேவேளை, இன்று காலையுடன் நிறைவடைந்த, 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சாரதிகளும், பாதசாரிகளும் வீதி விதிகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்