போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதானவருக்கு அடிப்படைவாத அமைப்புடன் தொடர்பு!

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதானவருக்கு அடிப்படைவாத அமைப்புடன் தொடர்பு!

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பதற்கு நிதி வழங்கியதாக தெரியவந்தமையை அடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை குறிப்பிட்டார்.

அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேலியகொடை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

அவரது வங்கி கணக்கிற்கு துபாயில் இருந்து பெருந்தொகை பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த பணத்தில் ஒரு தொகை, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் அமைப்பொன்றுக்கு ஒருவரால் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

வங்கியில் இருந்து பணம் பரிமாற்றப்பட்டமைக்கான தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்தது.

இந்தநிலையில் குறித்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்