ஓட்டமாவடியில் கிறிஸ்தவருடையது உட்பட 42 சடலங்கள் அடக்கம்

ஓட்டமாவடியில் கிறிஸ்தவருடையது உட்பட 42 சடலங்கள் அடக்கம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த 45 பேரின் உடல்கள் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடியில் புதைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு புதைக்கப்பட்ட சடலங்களில் ஒருவருடையது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவருடையதாகும்.

குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளின்படியே அவரது சடலம் புதைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஓட்டமாவடியில் சடலம் புதைக்கப்படும் இடத்திற்குச் சென்ற இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டார்.