கூட்டு ஒப்பந்தம் முத்தரப்பு ஒப்பந்தமாக காணப்பட வேண்டும் - வேலுசாமி இராதாகிருஸ்ணன்

கூட்டு ஒப்பந்தம் முத்தரப்பு ஒப்பந்தமாக காணப்பட வேண்டும் - வேலுசாமி இராதாகிருஸ்ணன்

பெருந்தோட்ட மக்களுக்கான கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் காலங்களில் முத்தரப்பு ஒப்பந்தமாக காணப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கூட்டுஒப்பந்தம் முத்தரப்பு ஒப்பந்தமாக காணப்படுமாயின் பெருந்தோட்ட மக்களுக்கான விடயங்களில் அரசாங்கத்தின் தலையீடும் இருக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்