சில பிரதேசங்களில் இன்று மழை பொழியக் கூடும்
சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இன்று (15) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
அத்துடன் கிழக்கு, ஊவா, வட மத்திய மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேசங்களிலும் இன்றைய தினம் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது