நாடாளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானம்

நாடாளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானம்

பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் நெல்லினை தேடி நாடாளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

சிலர் அரிசியினை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் விலையை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.

இதன் காரணமாகவே தற்போது அரிசியின் விலை சந்தையில் அதிகரித்துள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எனவே அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சிலர் நெல்லினை அரிசியாக மாற்றாது மறைத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன.

எனினும் நெல்லினை பதுக்கி வைப்பதற்கு எதிரான சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள தமக்கு அதிகாரம் இல்லை என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்