சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன - மகிந்தர அமரவீர
சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்தர அமரவீர தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்னர் ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு தேவையான மணல் மற்றும் கற்களை விநியோகிக்கும் பொறுப்பு எமது அமைச்சிற்கே வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற வகையிலேயே அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
வன அழிப்பு இடம்பெறுவதாக கூறுவதை அவ்வாறே ஏற்றுக்கொள்ள முடியாது.
நாளாந்தம் அவ்வாறான குற்றச்சாட்டுக்குள் முன்வைக்கப்படுகின்றன.
எனினும் ஓரளவு வன அழிப்பு நிலைமையும் காணப்படுகின்றது.
அமைச்சு என்ற ரீதியில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எமது பொறுப்பாகும்.
வன அழிப்பு குறித்து ஏற்கனவே 200 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் Asbestos கூரை தகடுகளை சுற்றாடலில் அகற்றுவதற்கு கட்டம் கட்டமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேசிய உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்