மாமாங்கம் பகுதியில் 600 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

மாமாங்கம் பகுதியில் 600 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு - மாமாங்கம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு பொருத்தமற்ற 600 கிலோ கிராம் தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்டுள்ள தேயிலையினையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்