பாடசாலை மாணவனை தாக்கிய இரு மாணவர்களும் விளக்கமறியலில்
அண்மையில் க.பொ.த சாதாரணதர பரீட்சைகளுக்கு முகங்கொடுத்த மாணவன் ஒருவனை தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காலி பதில் நீதவான் லலித் பத்திரனவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
காலி பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற பாடசாலையொன்றில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் அப்பாடசாலையின் 9ஆவது குழு என்ற மாணவர் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலினால் குறித்த மாணவனின் செவி புலன் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது