புதிதாக கண்டறியப்பட்ட உருதிரிபடைந்த கொவிட்19 வைரஸ் தீவிரமாக பரவக்கூடியது

புதிதாக கண்டறியப்பட்ட உருதிரிபடைந்த கொவிட்19 வைரஸ் தீவிரமாக பரவக்கூடியது

இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள தென்னாபிரிக்காவில் பரவும் வீரியமிக்க உருதிரிபடைந்த கொவிட்19 வைரஸ், தீவிரமாக பரவக்கூடிய இயல்பை கொண்டதாகும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் உப்புல் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது பயன்படுத்தப்படும் கொவிட்-19 தடுப்பூசி இந்த உருதிரிபடைந்த வைரஸிற்கு எதிராக எவ்வாறு செயற்படுகின்றது என்பது தொடர்பில் உலகலாவிய ஆய்வாளர்கள் இதுவரை உரிய முறையில் தகவல்களை வெளிப்படுத்தவில்லை.

இந்த தடுப்பூசிகள், தென்னாபிரிக்காவில் பரவும் வீரியமிக்க உருதிரிபடைந்த வைரஸிற்கு எதிராக சிறந்த முறையில் பயன்தராவிடின் நாம் தொடர்ந்தும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த உருதிரிபடைந்த வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மாத்திரமே இதற்கான தீர்வாக அமையாது.

எனவே மீண்டும் சுகாதார வழிமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை கடுமையாக பின்பற்றியே இந்த கொவிட்-19 பரவலை தடுக்க முடியும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் உப்புல் ரோஹண தெரிவித்துள்ளார்