வர்த்தமானியை மீள பெறாவிடின் நாடுதழுவிய தொழிற்சங்க நடவடிக்கை! - வைத்திய அதிகாரிகள் சங்கம்

வர்த்தமானியை மீள பெறாவிடின் நாடுதழுவிய தொழிற்சங்க நடவடிக்கை! - வைத்திய அதிகாரிகள் சங்கம்

சுகாதார சேவை யாப்பை திருத்தத்திற்கு உட்படுத்தி, வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை, மீளப்பெறாவிட்டால் முன்னறிவிப்பின்றி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அறிக்கை ஒன்றின் ஊடாக அந்த சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சுகாதார சேவை யாப்பானது, வைத்தியத்துறைசார் முக்கியஸ்தர்களின் இணக்கப்பாடின்றியே திருத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த திருத்தங்கள் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்படும்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது