அசாத் சாலியின் சர்ச்சைக் கருத்து தொடர்பில் சிஐடி விசாரணை!

அசாத் சாலியின் சர்ச்சைக் கருத்து தொடர்பில் சிஐடி விசாரணை!

அசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய விசாரணைகளை ஆரம்பிக்க குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அசாத் சாலி தெரிவித்த கருத்து தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், காவல்துறை தலைமையகத்திற்கும் முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்