ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு நிறைவு விழா நாளை

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு நிறைவு விழா நாளை

ஐக்கிய மக்கள் சக்தி, நாளைய தினம் தமது முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ளது.

நாளை பிற்பகல் 2 மணியளவில் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

சவால்களை வெற்றிக்கொள்ள ஒன்றாக முன்னிற்போம் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது சம்மேளனத்தின் தொனிப்பொருளாகும்.

கட்சித் தலைவரான, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் சம்மேளனத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக, கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையின்கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாரெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி ஒன்றுக்கு செல்வதாயின், அவ்வாறானதொரு அழைப்புக்கு நாங்கள் தயார்.

பொது அரசியல் கூட்டணியை உருவாக்க வேண்டும்.

கூட்டணியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும், எந்தவொரு அரசியல் கருத்தைக் கொண்டுள்ளவர்களும் அதில் இணையலாம்.

எனினும், அமைக்கப்படவுள்ள கூட்டணியின் தலைமைப் பதவியை ஐக்கிய தேசிய முன்னணியே தீர்மானிக்கும்.

எனவே, அந்தக் கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாஸ செயற்படும் வகையிலேயே, தாங்கள் முன்னோக்கி செல்ல எதிர்பார்ப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு இணங்கக்கூடிய தரப்பினருடனேயே தங்களுக்கு செயற்பட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்