அரசாங்கம் மிகப்பெரிய சீனி வரி மோசடியில் ஈடுபட்டுள்ளது-சாடும் சஜித்

அரசாங்கம் மிகப்பெரிய சீனி வரி மோசடியில் ஈடுபட்டுள்ளது-சாடும் சஜித்

தமது நண்பர்களை மகிழ்விப்பதற்காகவே, அரசாங்கம் மிகப்பெரிய சீனி வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

கதிர்காமம் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீனி மோசடி காரணமாக, நாட்டுக்கு 15.9 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் இதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும்.

இந்தப் பணத்தின் மூலம், கொவிட் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும், எவ்வளவு பாதுகாப்பு உபகரணங்களை பெற்றுக்கொடுத்திருக்கலாம்?

தற்போது நாட்டுக்கு அவசியமான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத அரசாங்கமே உள்ளதாக சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்