நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற யாழ்ப்பாண இளைஞனின் சடலம் கரையொதுங்கியது

நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற யாழ்ப்பாண இளைஞனின் சடலம் கரையொதுங்கியது

திருகோணமலை-நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (13) மாலை கரையொதுங்கியுள்ளது.

இவ்வாறு காணாமல் போனவர் யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் உள்ள குப்பிளான் பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திரராசா சிந்துஜன் (21 வயது) எனவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி 7 பேர் கொண்ட குழுவினர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்து ஆலய வழிபாடுகளை முடித்து விட்டு நிலாவெளி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் வழியில் நிலாவெளி கடலில் குளிப்பதற்காக சென்ற நிலையில் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஒருவருடைய சடலம் நேற்று மீட்கப்பட்டது.

இந்நிலையில் மற்றைய இளைஞரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவரது சடலம் இன்று 13ஆம் திகதி மாலை கரையொதுங்கி உள்ளதாகவும் இவரது சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.