இன்று பதிவான கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை

இன்று பதிவான கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 102 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இன்றைய தினம் 179 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதற்கமைய இன்றைய தினம் மாத்திரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 281 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 87,567ஆக உயர்வடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது