கால் மிதித் துடைப்பானில் இலங்கையின் தேசியக் கொடி:வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கை

கால் மிதித் துடைப்பானில் இலங்கையின் தேசியக் கொடி:வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கை

சீனாவில் தயாரிக்கப்பட்ட வழுக்காத கால் மிதித் துடைப்பானில் இலங்கையின் தேசியக் கொடியின் படத்தை தவறாகப் பயன்படுத்தியமை குறித்து பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான தகவல்களை சீன வெளிவிவகார அமைச்சிற்கு வழங்கி, இலங்கையின் தேசியக் கொடியை தவறாகப்
பயன்படுத்தி கால் மிதித் துடைப்பான்கள் மற்றும் இதர பொருட்கள் தயாரிக்கப்படுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பொருட்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்துமாறு, குறித்த இணையத்தளத்திற்கும் இந்தத் தயாரிப்புக்களை சந்தைப்படுத்திய நிறுவனத்திற்கும் சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது