புர்கா தடையானது முஸ்லிம் பெண்களின் மனித உரிமைகளை மீறும் செயல்
புர்கா அணிவதற்கு தடை விதிக்கும் செயற்பாடானது முஸ்லிம் பெண்களின் மனித உரிமைகளை மீறும் செயல் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்ரீன் சரூர் தெரிவித்துள்ளார்.
புர்கா அணிவதற்கு தடை விதிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டிருந்தார்.
குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் அது நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் புர்கா அணிவதை தடை செய்வது தொடர்பில் முஸ்லிம் பெண்களுடன் கலந்துரையாட வேண்டும் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்ரீன் சரூர் வலியுறுத்தியுள்ளார்