ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்குமிடையில் தொலைபேசி கலந்துரையாடல்

ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்குமிடையில் தொலைபேசி கலந்துரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தலைவர்களுக்கும் இடையில் அபிவிருத்தி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்திலும் இந்த தொலைபேசி உரையாடல் குறித்து பதிவிட்டுள்ளார்