கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 295 பேர்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 295 பேர்

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 295 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் 87 ஆயிரத்து 286 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 2 ஆயிரத்து 508 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்