தேவாலயம் நடத்துவதாக ஹெரோயின் விற்பனை செய்த இருவர் கைது

தேவாலயம் நடத்துவதாக ஹெரோயின் விற்பனை செய்த இருவர் கைது

தேவாயலம் ஒன்றை நடத்துவதாக தெரிவித்து ஹெரோயின் விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்தின் பூசகர் மற்றும் தேவாலயத்திற்கு பொறுப்பான நபர் என்ற பெயரில் இவர்கள் அங்குதங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்த போது குறித்த பெண்ணின் பையில் இருந்து 140 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், இணையத்தளம் ஊடாக இவர் ஹெரோயின் விநியோகித்து வந்துள்ளார் எனபதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது