சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 5 ஆயிரத்து 125 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 4 ஆயிரத்து 702 பேர் குணமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வெலிகடை சிறைச்சாலையில் இதுவரையில் 929 பேருக்கும் மெகசின் சிறைச்சாலையில் 881 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் மஹர சிறைச்சாலையில் 836 பேருக்கும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 458 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இதுவரையில் 370 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நோர்வூட் பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்ட மூவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அந்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

நோர்வூட் பிரதேச சபையின் உபதவிசாளரது மனைவிக்கு அண்மையில் கொவிட்-19 தொற்றுறுதியானது.

இந்த நிலையில் அவர்களுடன் தொடர்புடைவர்களுக்கு கடந்த 11ஆம் திகதி மேற்கொள்ள பி.சி.ஆர் பரிசோதனைகளில் இவர்களுக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக அந்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டார்