டெஸ்ட் அணித் தலைவரானார் ப்ரத்வெய்ட்: ஜேசன் ஹோல்டர் நீக்கப்பட்டார்!

டெஸ்ட் அணித் தலைவரானார் ப்ரத்வெய்ட்: ஜேசன் ஹோல்டர் நீக்கப்பட்டார்!

ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக கிரைக் ப்ரத்வெய்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தொிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக 7 டெஸ்ட் போட்டிகளுக்கு ப்ரத்வெயிட் தலைமை தாங்கியுள்ளார். சகலதுறை வீரர்களுக்கான டெஸ்ட் தரப்படுத்தலில் தற்போது ஜேசன் ஹோல்டர் முதலிடத்தை வகிக்கிறார்.

2015ஆம் ஆண்டு தினேஸ் ரம்தினுக்கு பின்னர் டெஸ்ட் அணித்தலைவராக ஜேசன் ஹோல்டர் பொறுப்பேற்றார்.

அன்று முதல் இதுவரை 37 டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் தலைவராக செயற்பட்டு 11 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

அத்துடன், அவர் தலைமையிலான 21 போட்டிகள் தோல்வியிலும் 5 போட்டிகள் சமநிலையிலும் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவராக ப்ரத்வெய்ட் செயற்படுவார் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தொிவித்துள்ளது.

இலங்கை எதிராக விளையாடவுள்ள மேற்கிந்திய டெஸ்ட் அணி விபரம் இன்று (12) வெளியிடப்படுவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது