இந்தோனேஷியாவில் பயங்கரம்- பலர் ஸ்தலத்திலே பலி!

இந்தோனேஷியாவில் பயங்கரம்- பலர் ஸ்தலத்திலே பலி!

இந்தோனேஷியாவின் முக்கிய தீவான ஜாவாவில் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த விபத்தில் 39 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

விபத்தில் காயங்களுக்குள்ளானவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சுமேதாங் நகருக்கு அருகிலுள்ள பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்திற்குள்ளான பேருந்தில் இஸ்லாமிய ஜூனியர் உயர் நிலைப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் சில பெற்றோர்களும் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தின் பிறேக் சரியாக இயங்காததன் காரணமாகவே இந்த அனர்த்தம் நேர்ந்ததாக தேடல் மற்றும் மீட்பு பிரிவினர் இன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.