தனுஷ்க குணதிலக்கவின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு
இலங்கைக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி நேற்று இடம்பெற்றது.
இதன்போது தனது அரைச் சதத்தை பூர்த்தி செய்து இருந்த இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க களத்தடுப்புக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது.
பந்தினை தடுத்தாடி ஓட்டம் எடுக்க முயற்சிக்கும் போது ஏற்பட்ட குழப்ப நிலையில், தனது காலால் பந்தை உதைத்து தமக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிவித்து ஆட்டமிழப்பு வழங்குமாறு பந்துவீச்சாளர் கைரன் பொலார்ட் கோரினார்.
இதற்கு நடுவரும் ஆட்டமிழப்பு வழங்கினார்.
இதனையடுத்து இந்த ஆட்டமிழப்பு குறித்து பல்வேறு தரப்பினரால் அதிருப்தி வெளியிடப்பட்டது.
களத்தடுப்புக்கு இடையூறு ஏற்படுத்தி குற்றச்சாட்டில் (37வது ஒழுங்குவிதி) ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட முதலாவது இலங்கை வீரராக தனுஷ்க குணதிலக பதிவாகியுள்ளார்