1000 ரூபா வேதனம் குறித்த வர்த்தமானி தோட்ட உரிமையாளர்களுக்கே சாதகமானது
தேயிலை மற்றும் இறப்பர் சார் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபா என அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி தோட்ட உரிமையாளர்களின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தொழில் அமைச்சரின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானமானது கடந்த 5 ஆம் திகதி முதல் செல்லபடியாதல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதன நிர்ணய சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்த பட்ச நாளாந்த வேதனம் 900 ரூபாவாகவும் பாதீட்டு கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் சேர்த்து நாளாந்த வேதனம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது