இன்றிரவு பயணிக்கவிருந்த அஞ்சல் புகையிரதம் இரத்து..!

இன்றிரவு பயணிக்கவிருந்த அஞ்சல் புகையிரதம் இரத்து..!

மலையக தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளமையால் இன்றைய இரவுநேர அஞ்சல் தொடருந்து சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
 
நாவலப்பிட்டியில் இருந்த நானு ஓயா தொடருந்து நிலையம் வரை பொருட்களை கொண்டுசென்ற தொடருந்து ஒன்று, ஹட்டன் தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டது.
 
இதேநேரம், இன்று காலை கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்குகளை ஏற்றிச் செல்லும் தொடருந்து ஒன்றும் அம்பேவல மற்றும் பட்டிப்பொல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.
 
இதன் காரணமாக இரவுநேர அஞ்சல் தொடருந்து சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
 
தடம்புரண்ட தொடருந்தை தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.